உடுமலையில் கடும் வெயில் எதிரொலி..! - இளநீர் விலை ரூ.40 ஆக உயர்வு!

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து இளநீர் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் இளநீர் விலை ரூ.40 வரை உயர்ந்துள்ளது. ஆனாலும் விற்பனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என வியாபாரிகள் தகவல்.


திருப்பூர்: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இளநீர் விலை ரூ,40 க்கு விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு, நுங்கு ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதன் காரணமாக இளநீர் விலையும், விற்பனையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த இளநீர் தற்போது, ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.



இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இளநீர் வியாபாரி ஒருவர் கூறியதாவது, வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரளவு தண்ணீர் உள்ள பகுதியில் மட்டுமே இளநீர் உற்பத்தி அதிகரித்துள்ளது. மற்ற பகுதியில் உற்பத்தி குறைந்துள்ளது.

இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இளநீர் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும், விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்பட வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...