மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பில் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியில், மாணவிகள் தொழில்முனைவோராக உருவாகி சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில், "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பில் மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் எம்.ஆர். எழிலி தலைமை வகித்தார். பிரபல் தொழில் நிறுவனத்தின் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) பிரிவுத் தலைவர் வித்யா செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.

அப்போது பேசிய அவர், பெண்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தற்போது வரலாறு காணாத அளவில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. எனவே, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, சவால்களையும் இன்னல்களையும் நேர்மறை சிந்தனையுடன் எதிர்கொள்ள வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கி தொழில்முனைவோராக உருவானால் தங்களது வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.

மேலும், பேச்சாற்றல் மற்றும் தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்வது எந்தத் துறையிலும் வெற்றிக்கு அவசியமானது என்றும், புதிய சிந்தனைகள், புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை மற்றும் நன்றி உணர்வு ஆகியவை தொழில்முனைவோரின் முக்கிய பண்புகளாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த

அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவர் முனைவர் கனகராஜ்

பேசுகையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், தொழில்முனைவோராக உருவாகுவதன் மூலம் குடும்பத்திற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மாணவிகள் முக்கிய பங்களிப்பை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், பெண்கள் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர்களும், கணினி அறிவியல் துறை பேராசிரியர்களுமான முனைவர் மாலதி, முனைவர் சித்ரா, தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் முனைவர் ஷீலா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் ஏராளமான முதலாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்றனர்.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...