மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சோகம்!

உடுமலை அடுத்த எஸ்.வி.புரம் பகுதியை சேர்ந்த சக்தி குமார் (16) என்ற பிளஸ் 1 மாணவர் தனது நண்பர்கள் 4 பேருடன் ஜோத்தம்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்த போது, மாணவர் சக்தி குமார் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய நிலையில் தீயணைப்பு துறையினர், சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரது உடலை மீட்டனர்.


திருப்பூர்: உடுமலை அருகே கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன். இவரது மகன் சக்திகுமார் (16). இவர் உடுமலை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுத் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அதன்படி அவருடைய வகுப்புத் தோழர்களான மடத்துக்குளத்தை அடுத்த செங்கண்டிபுதூரை சேர்ந்த பிரசன்னா, ஆண்டியக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ராகுல் மற்றும் உடுமலை கணேஷ் நகரை சேர்ந்த தருண்குமார் ஆகியோருடன் மடத்துக்குளம் அருகே உள்ள ஜோத்தம்பட்டி பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அங்கு செங்கண்டிபுதூரைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் இறங்கி மாணவர்கள் அனைவரும் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சக்திகுமார் கிணற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது நண்பர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் சக்திகுமார் கிணற்று நீரில் மூழ்கினார். இதனையடுத்து சம்பவம் குறித்து உடுமலை தீயணைப்பு துறையினர் மற்றும் கணியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி சக்திகுமாரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் சுமார் 40 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இதனால் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து 3 மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு கிணற்றிலுள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சக்திகுமாரின் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...