உடுமலை அருகே காந்தலூரில் 'சுற்றுலா விழா 2023' தொடக்கம் - மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனத்துடன் கோலாகலம்

உடுமலை அருகே காந்தலூரில் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்களுடன் சுற்றுலா விழா-2023 கோலாகலமாகத் தொடங்கியது. கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் இந்த விழா நடத்தப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள மறையூர் காந்தளூர் பகுதியில் ஏராளமான தமிழர்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர்.

மேலும், சுமார் 20க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. காந்தலுார், மூணாறு, மறையூர், சின்னாறு ஆகியவை சுற்றுலா தலங்களாக உள்ளன. பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

பசுமை சூழ்ந்த மலைகள், சந்தன மரக்காடு,வனப்பகுதி, பழங்கால பாறை ஓவியங்கள், சிற்பங்கள், முனியறைகள், ஆப்பிள் தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் மர வீடுகள், சொகுசு ஓட்டல்கள் என, இப்பகுதிகளில், 52 சுற்றுலா இடங்கள் உள்ளன.

கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணியர் வருகையும் தற்போது அதிகரித்துள்ளது.



சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வனத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 29ம் தேதி வரை காந்தலுார் சுற்றுலா விழா-2023 கொண்டாடப் படுகிறது.

இதற்கான துவக்க விழாவில் வனத்துறையினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சியுடன் இந்த விழா தொடங்கியது.



சுற்றுலா விழாவை முன்னிட்டு, வனப்பகுதியில் என்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.



டிரக்கிங், கேம்ப் பயர், மலர் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், தமிழகம் மற்றும் கேரளாவின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் நாடகங்கள் நடத்தப்பட்டன. மேலும், சீதையுடன் ராமன் வசித்த பகுதியாக காந்தலூர் குறிப்பிடப்படுவதால், அனைத்து விடுதிகள், சுற்றிலும் உள்ள கிராமங்களில், சீதா ராமரை வணங்கும் வகையில், ராமர்வில் வடிவில் ஆயிரக்கணக்கான திருவிளக்குகள் மலைப்பகுதியில் ஏற்றப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...