பல்லடம் பிரத்தியங்கரா தேவி கோயிலில் யாகக் குண்டம் - கூடைகூடையாய் வர மிளகாயைக் கொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகிலுள்ள உக்ர பிரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற நிகுபல யாக குண்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் கூடை கூடையாக வரமிளகாய்களைக் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோவில் மற்றும் உக்கிர பிரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு நிகுபல யாக பூஜை நடைபெற்றது.



இந்த யாகத்தில் காய்ந்த மிளகாய், பலகாரங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை பக்தர்கள் சீர்வரிசையாக கொண்டு வந்து, கூடை கூடையாக யாக குண்டத்தில் கொட்டி வழிபாடு செய்தனர்.



இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களிடம் இருந்து, தீய சக்திகள், பில்லி -சூனியங்கள் விலகும் எனவும், தொழில் வளர்ச்சி, குழந்தையின்மை, திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய், காய்கறிகள் ஆகியவற்றை பிரத்தியங்கிரா தேவிக்கு படைத்து, பின்னர் யாக குண்டத்தில் கொட்டினர்.



பொள்ளாச்சி, நல்லூர், சோமனூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், இந்த யாகபூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...