பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டு சந்தையில் இன்று ஒரே நாளில் 3 கோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் விற்பனையானது. இதனால், வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை: தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை மாட்டுச்சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது. இந்த சந்தையானது வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகள் என 2 நாட்கள் நடைபெறுகிறது.



செவ்வாய்க்கிழமைகளில் மாடு விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து நடைபெறுகிறது.



இந்த சந்தையில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வரும். மேலும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.

கடந்த சில மாதங்களாக சந்தை நாட்களில் ஒரு கோடி மட்டுமே வர்த்தகம் நடைபெற்று வந்தது.



தற்போது வருகிற 22-ந் தேதி ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி பொள்ளாச்சி மாட்டு சந்தை களைகட்டி காணப்பட்டது.

வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டுவரப்பட்டிருந்தது.



அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர்.



இதனால் காலை முதலே சந்தை களைகட்டி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இன்று ஒரே நாளில் 3 கோடி ரூபாய்க்குமேல் மாடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...