என்.ஐ.ஏ சட்டம் ஜிஹாதிகளுக்கு எதிரானது, இஸ்லாமியர்களுக்கு அல்ல..! - பாஜக தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி தகவல்

கோவை காந்திபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என திமுகவினர் பொய்யாக பரப்பி வருவதாகவும், ஊழல்வாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வந்தவர் தான் பாஜக தலைவர் அண்ணாமலை எனவும் கூறினார்.


கோவை: பாஜக கொண்டு வந்த என்.ஐ.ஏ சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என பாஜக தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



இஸ்லாமியர், கிறிஸ்தவ, ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் சகோதரத்துடன் இந்தியாவில் உள்ளனர். தமிழகத்தில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பொய்யாக பரப்பப்பட்டு வருகிறது. ஊழல்வாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வந்தவர் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

காங்கிரசும், திமுகவும் சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர். என்.ஐ.ஏ முஸ்லிம்களை அல்ல ஜிஹாதிகளை கைது செய்கிறது. என்.ஐ.ஏ., ஜிஹாதிகளுக்கு எதிரானது.

கர்நாடகத்தில் குஜராத்தில் இருந்தது போல முன்னேற்றம் உண்டாகும் என்பதால் மிகப்பெரிய வெற்றியை பாஜக அடையும். கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் பாஜக நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர்களை பெறும். குறைந்த விலையில், வசதியாக புனித யாத்திரை செல்லும் வகையில் ஹஜ் கமிட்டியின் புதிய கொள்கை உள்ளது, என்றார்.

இவரை தொடர்ந்து, பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி பேசியதாவது,

தமிழகத்தில் இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் தங்களுக்கான தேவையை, பிரச்னைகளை விண்ணப்பங்களாக கொடுத்து வருகின்றனர். பாஜகவிற்கு சிறுபான்மையினர் இடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் நாளை நடைபெற உள்ள இப்தார் விருந்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்

உத்தரபிரதேசத்தில் நடந்த அக்திக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கொலை வழக்கு சம்மந்தமாக தமிழகத்தில் தவறாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பான உண்மை தகவலை இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...