அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் - கோவையில் அதிமுகவினர் கொண்டாட்டம்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், கோவையில் முன்னாள் அமைச்சர் செ.மா.வேலுசாமி தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


கோவை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து, கோவையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து கோவையில் அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் செ.மா.வேலுசாமி தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதனை அங்கீகரித்திருந்தது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாராக அங்கீகரித்துள்ளது. இதனையடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செ.மா.வேலுசாமி தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் செ.மா.வேலுசாமி பேசுகையில், தொண்டர்களின் உணர்வை மதித்து தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தொண்டர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி. கொண்டு வந்த திட்டம்க்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...