சிறுவாணி அணையின் நீர்மட்டம் 7.50 அடியாக சரிவு

கோவை மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் 7.5 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக நாள் ஒன்றுக்கு 45 எம்.எல்.டி. நீரும், மாநகர பகுதிகளுக்கு 41 எம்.எல்.டி நீர் தரப்படுவதாக அதிகாரிகள் தகவல்.



கோவை: கோவை மாவட்டத்தில் மழை குறைந்ததன் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 7.50 அடியாக சரிந்துள்ளது

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியில் உள்ள 30 வார்டு மக்களுக்கு வழங்கப்படுவதுடன், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுவாணி அணை 49.53 அடி உயரம் கொண்டது. ஆனால் கேரள அரசு 45 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்க அனுமதிப்பது இல்லை. கடந்த 3 வருடங்களாக கேரள நீர்பாசனத்துறை அணை பாதுகாப்பு காரணம் என்று கூறி சிறுவாணி அணை முழு கொள்ளளவு அடைய அனுமதிப்பதில்லை.

அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அணையில் இருந்து அதிகப்படியான நீரினை சிறுவாணி ஆற்றில் திறந்து விட்டு அணையின் நீர்மட்டத்தை கணிசமாக குறைத்துள்ளது.

மேலும் தற்போது மழையின்றி அணையில் நீர்மட்டம் குறைந்த காரணத்தினால், சிறுவாணி அணையிலிருந்து குகை வழிப்பாதை வழியாக நாள் ஒன்றுக்கு வரும் நீரின் அளவு தற்போது மிகவும் குறைந்துள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது, சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 7.5 அடியாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 45 எம்.எல்.டி. நீர் குடிநீர் தேவைக்காக எடுக்கப்படுகிறது. மாநகர பகுதிகளுக்கு 41 எம்.எல்.டி நீர் தரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...