அன்னூர் அருகே காப்பர் கம்பிகள் திருடிய தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் கைது!

கோவை அன்னூர் அருகே இரும்பு, காப்பர் கம்பிகள் விற்பனை செய்யும் நிறுவனத்திற்குள் புகுந்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடிச்சென்ற தூத்துக்குடியை சேர்ந்த பூவலிங்கம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் அன்னூர் மாணிக்கம்பாளையம் பகுதியில் அல்லாய்ஸ் என்ற இரும்பு, காப்பர் போன்ற கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதனிடையே வெங்கடேஸ்வரன் கடந்த மே 5 ஆம் தேதி வியாபாரம் முடிந்து தனது நிறுவனத்தைபூட்டிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மறுநாள் காலை வந்து பார்த்தபோது நிறுவனத்திற்குள் வைத்திருந்த 674 காப்பர் இரும்பு பாகங்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இப்புகாரில் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை பிடிக்க கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூவலிங்கம் (32) என்பவர் இக்குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பூவலிங்கத்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து சுமா‌ர் 5 லட்சம் மதிப்புள்ள 674 காப்பர் இரும்பு பாகங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...