பெண் ஆய்வாளர் மீது பொய் புகார் கொடுக்க வந்த பெண்கள் - எச்சரித்து அனுப்பிய கோவை சரக டிஐஜி!

கோவை சரக டிஐஜி அலுவலகத்திற்கு பெண் ஆய்வாளர் ஒருவர் மீது பொய் புகார் அளிக்க வந்த 2 பெண்களை டிஐஜி விஜயகுமார் எச்சரித்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ஆய்வாளரை அலுவலகத்திற்கு வரவழைத்து டிஐஜி விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார்.


கோவை: கோவை ரெட் பீல்ட் பகுதியில் உள்ள கோவை சரக டிஐஜி அலுவலகத்திற்கு நேற்று இரண்டு பெண்கள் புகார் அளிக்க வந்தனர்.

அந்தப் புகார் மனுவில் பெண் ஆய்வாளர் ஒருவர், பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தனர். அந்த மனுவை பார்த்த டிஐஜி விஜயகுமார், அந்தப் பெண் ஆய்வாளரை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்.

அதில், அந்த பெண்கள் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அது குறித்து ஆய்வாளர் எச்சரித்ததால் அவர் மீது புகார் அளிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, டிஐஜி விஜயகுமார் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...