கோவை விமான நிலையத்தில் 3.03 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - இருவர் கைது

சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஜியாவுதீன் (27), சென்னையை சேர்ந்த சேக்முகமது (31), ஆகிய இருவரை கைது செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் ரூ.1.09 கோடி மதிப்பிலான 3.03கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: சார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த 3.03 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அந்த விமானத்தில் வந்த சில பயணிகளை சோதனை செய்தனர். அப்போது 4 பயணிகள் உள்ளாடைகளில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களிடமிருந்தசுமார் ரூ.1.9 கோடி மதிப்பிலான 3.03 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் புதுக்கோட்டையை சேர்ந்த ஜியாவுதீன் (27), சென்னையை சேர்ந்த சேக்முகமது (31), ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...