கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்சிப்பதால், சுமார் 6,000 மக்கள் வசிக்கும் பகுதியில் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் முதலமைச்சர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பி திட்டத்தை கைவிட வலியுறுத்தியுள்ளனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி தீர்மானம் ஏதும் இல்லாமல் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நுண்குப்பை உரமாக்கும் மையம் மற்றும் திடக்கழிவு பிரித்தல் மையம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran உள்ளிட்டோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.



சுமார் 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் தற்போது குடியிருப்புகளுக்கு மத்தியில் 24 லட்சம் லிட்டர் மற்றும் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் மேல்நிலை தொட்டிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இங்கு குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்சிப்பது பொதுமக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குப்பை மையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் அபாயம் உள்ளதுடன், துர்நாற்றம், ஈ, கொசு உள்ளிட்ட நோய் பரப்பும் காரணிகளால் டெங்கு, மலேரியா, சுவாச நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் இருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



திட்டமிடப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் தனியார் மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளதால், இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு




இத்திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத மாற்று இடத்தில் மட்டுமே திடக்கழிவு மேலாண்மை மையங்களை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் குப்பை மேலாண்மை மையம் அமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி, திட்டத்தை நிரந்தரமாக கைவிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...