கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அரசாணைகளின்படி உடனடியாக வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் மேற்கண்ட தலைவர்களின் படங்களை வைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், இதுதொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினர்.



இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது:

கடந்த 1978 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி, அரசு அலுவலகங்களில் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் ஆகிய தலைவர்களின் படங்களை வைக்க வேண்டும். இந்தக் கோரிக்கை தொடர்பாக சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவை கடந்த மே 18-ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும், இதுவரை அந்த மனு தொடர்பாக எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்றும், அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்களும் வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.



மேலும், கொள்கைத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வாக்கு சேகரித்து ஆட்சிக்கு வந்த நிலையில், முதலமைச்சரின் படங்கள் மட்டும் ரேஷன் கடைகள் முதல் தலைமைச் செயலகம் வரை பல்வேறு அரசு அலுவலகங்களில் உடனடியாக வைக்கப்படுவதாகவும், சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர்களின் படங்களை வைப்பதில் அரசு தாமதம் காட்டுவதாகவும் ஈஸ்வரன் குற்றம்சாட்டினார்.

டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் டாக்டர் அம்பேத்கர், பகத் சிங் போன்ற தலைவர்களின் படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தமிழக அரசு தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர், முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பிய மனு தொடர்பாக உரிய பதில் கிடைக்கும் வரை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் காத்திருப்பு போராட்டத்தை தொடரப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...