கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மனுக்களுடன் குவிந்த மக்கள்!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ இன்று (மே 16)மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌, மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ இன்று காலை 11.00 மணி முதல்‌ நண்பகல்‌ 1.00 மணி வரை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெற்றது.



இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌ சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் பொதுமக்கள் அளித்தனர்.



மேலும்‌, இக்கோரிக்கை மனுக்களின்‌ மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என மேயர் தெரிவித்தார்.



எனவே, இந்த மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்திற்கு வரும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Newsletter

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...