சிறுமுகை அருகே கார் மரத்தில் மோதி விபத்து - வாலிபர் பலி

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்(35) என்பவர் தனது மனைவி மற்றும் மகன்கள் உள்பட 5 பேருடன் உதகைக்கு சுற்றுலா சென்ற நிலையில், குமரன்குன்று அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: சிறுமுகை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (35). இவர் தனது மனைவி ரஞ்சனி (30), மகன்கள் ஜோசப் ஆப்ரகாம் (8), கேசா சாரல் (6). ராஜேஷின் சகோதரி சித்ரா (27)ஆகியோர் கோடை விடுமுறையையொட்டி தங்களது காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மாலை 6 மணியளவில் பாலூரில் இருந்து காரில் ஊட்டிக்கு புறப்பட்டனர். காரை ஓட்டுனர் பூவேந்திரன் ஓட்டி வந்தார். கார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த குமரன்குன்று அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன் இருக்கையிலிருந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஓட்டுனர் உள்பட அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்தனர். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்ட சிறுமுகை போலீசார், ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் சுற்றுலா சென்ற கார் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...