கரூர் - பல்லடம் இடையே செல்லும் பேருந்தில் ஜூஸ் கொடுத்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயற்சி!

கரூரில் இருந்து பல்லடம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் நோக்கில் மர்ம நபர் ஒருவர் கொடுத்த ஜூசை குடித்த இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: கரூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த அரசு பேருந்தில் ஜூஸ் கொடுத்து பிக்பாக்கெட் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே வேலப்பம்பாளையத்தை சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்மணி இன்று தனது எட்டு வயது மகன் சர்வேஷ் மற்றும் 7 வயது மகன் மித்ரன் ஆகியோருடன் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கோவை செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ரேஷ்மாவிடம் வெயிலுக்கு ஜூஸ் குடிக்குமாறு கொடுத்துள்ளார். ரேஷ்மாவும் ஜூசை குடிக்காமல் தனது இரண்டு குழந்தைகளுக்கு அதனை கொடுத்துள்ளார்.



இந்நிலையில், ஜூசை குடித்த சிறிது நேரத்திலேயே பேருந்து பல்லடம் அருகே வந்தபோது சர்வேஷ் மற்றும் மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர். அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவைத்து இரண்டு குழந்தைகளையும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



2 குழந்தைகளுக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு மர்ம நபர் கொடுத்த ஜூசை குழந்தைகளுக்கு கொடுத்ததால் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...