கள்ளச்சாராய விவகாரம் - தமிழக அரசை கண்டித்து கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய அரசை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கள்ளச்சாராய விற்பனை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய அரசை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், கோவை மாநகர்மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு எதிராகவும், திமுக அரசை கண்டித்தும் பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாகவும்,அதை தடுக்கஉரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.



ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பாஜகவின் மாநில விவசாயிகள் அணிதலைவர் ஜி.கே.நாகராஜ் பேசியதாவது,



தமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளையும் குறைக்க வேண்டும் என அரசுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

அழிவுப் பாதையை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கிறது. கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கி இருக்கும் அரசு, விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில்லை.

பல ஆண்டுகளாக கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கின்றோம். கள் ஒரு சத்தான உணவு, அதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை. ஆனால் மிகவும் உடலுக்கு கெடுதியான சாராயத்தை முன்னெடுத்து கொண்டு இருக்கின்றது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...