கோவையில் குடிநீர் குழாயிலிருந்து வரும் சாக்கடை கழிவுகள் - பொதுமக்கள் அதிர்ச்சி!

கோவை புலியகுளம் அடுத்த கோவில் வீதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் குழாய் மூலம் வரும் தண்ணீரில் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால், பலமுறை மனு அளித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் உள்ள கருப்பராயன் கோவில் வீதியில் குடிநீரில் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள 66வது வார்டுக்கு உட்பட்ட கருப்பராயன் கோவில் வீதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து கடந்த சில மாதங்களாக சாக்கடை நீர் வெளியேறி வருகிறது.

குடிநீர் குழாயில் தண்ணீர் வரும் பொழுது முதலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாக்கடை நீர் குடிநீருடன் கலந்து வருகிறது. இதனால் குடிநீரில் சாக்கடை துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் குழாயை பயன்படுத்தாமல், அருகே உள்ள குடியிருப்புகளிலிருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல முதியவர்கள் சில தூரம் நடந்து சென்று குடிநீர் எடுக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்க நேற்று குடிநீர் வந்த பொழுது ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாக்கடை நீரை வெளியேற்றி விட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள டேங்குகளில் நிரப்பினர்.



ஆனால் நேற்று வந்த நீர் முழுவதும் சாக்கடை கழிவுகள் கலந்து வந்துள்ளது. இதனால் தண்ணீர் டேங்குகளில் துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தங்களது தண்ணீர் டேங்கில் இருந்த தண்ணீரை வெளியேற்றி தூய்மைப்படுத்தும் நிலை ஏற்பட்டது.



அதேபோல இன்று மாலையும் குடிநீர் வரும்பொழுது குழாயில் இருந்து சாக்கடை கழிவுகள் கலந்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சாக்கடை கலந்து வரும் நீர் தொடர்பாக பொதுமக்கள் கூறும் பொழுது பல மாதங்களாக இந்த பிரச்சனை உள்ளது என்றும் சாக்கடை கலந்து வரும் நீரால் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...