11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகள் விதிமீறல் - கோவை ஆட்சியரிடம் புகார் மனு

தனியார் பள்ளிகளில் அரசு விதிமுறைகளின்படி 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்றப் பேரரவை சார்பில் மனு அளிக்கப்பட்டது.



கோவை: தமிழ்நாடு முழுவதும் இன்று 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதன்படி, பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலையிலிருந்து அவர்களுக்கு விருப்பமான பிரிவுகளை தேர்ந்தெடுத்து பதினோராம் வகுப்பில் சேர்ந்து வருகின்றனர்.



இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் அரசு விதிமுறைகளுக்கு மாறாக மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும், இதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



இதுகுறித்து அப்பேரவையினர் கூறியதாவது:

கோவை மாவடத்தில் பல்வேறு பள்ளிகளில் தமிழக அரசின் இடஒதுக்கீடு விதிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு தன்னிச்சையாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதனை கல்வித்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர் ஆகியோர் இல்லாததால் அம்மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி இருக்கிறது. கடந்த முறை இவற்றையொல்லாம் கண்காணிக்க ஆய்வுக்குழு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது அக்குழுவும் இல்லாததால், மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக மாணவர்கள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...