கோவையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்றைய தினம் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வந்த நிலையில், இன்று பிற்பகல் இடையர்பாளையம், கோவில்மேடு, டிவிஎஸ் நகர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

வெப்ப சலனம் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் சூலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.



இந்நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ரயில் நிலையம், பூ மார்க்கெட், உக்கடம், இடையர் பாளையம் ஆகிய மாநகர பகுதிகளிலும் கணுவாய், தடாகம், சோமையம்பாளையம் ஆகிய புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 



இந்நிலையில் இடையர்பாளையம், கோவில்மேடு, டிவிஎஸ் நகர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். 



காலையிலிருந்து வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...