கேஎம்சிஎச் சார்பில் "மொபைல் ஸ்ட்ரோக் யுனிட்" சேவை துவக்கம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கேஎம்சிஎச் மருத்துவமனை இன்று உயிர்காக்கும் வசதியுடன் "மொபைல் ஸ்ட்ரோக் யுனிட்" என்னும் ஒரு புதிய ஆம்புலன்ஸ் சேவையினை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 



இதன் துவக்க விழாவில் கேஎம்சிஎச்-யின் ரேடியாலஜி மற்றும் டையக்நாஸ்டிக் இமேஜிங் மருத்துவர் மேத்திவ் செரியன் மற்றும் துணைத் தலைவர் தவமணி டி.பழனிசாமி ஆகியோர் துவக்கவுரையாற்றினர். 



மொபைல் ஸ்ட்ரோக் யுனிட்-ஐ அறிமுகம் செய்து கேஎம்சிஎச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சைன்டிஸ்ட் கமிட்டி தலைவர் மற்றும் எஸ்ஆர்எம்சி-யின் நியூரோ- ரேடியாலஜி துறை தலைவர் டாக்டர் சந்தோஷ் ஜோசப், அமெரிக்காவின் ருஸ் மருத்துவ பல்கலைக் கழகத்தின் டிமட்ரியுஸ் லூப்ஸ், கன்னடா பூத்ஹில்ஸ் பெடிக்கல் சென்டரின் டாக்டர் மயன்க் கோயல், ஜெர்மனி ஆல்பெர்டு க்ரூப் மருத்துவமனை மருத்துவர் ரெனெ செபோட் ஆகியோர் பங்கேற்றனர். நீயூராலஜிஸ்ட் மருத்துவர் அருள்செல்வன் நன்றியுரை வழங்கினார்.



இதில், கேஎம்சிஎச் தலைவர் மருத்துவர் நல்ல ஜி.பழனிசாமி பேசுகையில், மொபைல் ஸ்ட்ரோக் யுனிடில் விரைவாக சிகிச்சை அளிக்கப்படுவதால் நோயாளி குணமடைதல் விரைவாகவும், பாதிப்புகள் குறைவாகவும் இருக்கும். இதன் மூலம் நீண்ட கால பராமரிப்பு மற்றும மறுவாழ்வு தேவையை கணிசமாக குறைப்பதே எங்களது நோக்கம்" என்றார்.

இந்த முன்மாதிரி திட்டத்தை நாடு முழுவதும் இத்தகைய மொபைல் வேண் வசதியை ஏற்படுத்த முடியுமா என்பது தான் மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிறுவனங்களின் பரவலான எதிர்பார்ப்பாக உள்ளது.



கேஎம்சிஎச்யில் நரம்பியல் நிபுணர்கள், குறுக்கீட்டு மருத்துவ கதிர்வீச்சு நிபுணர்கள் அடங்கிய குழு, மருத்துவர் அருண் பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. பக்கவாதத்துக்கென முன் எச்சரிக்கை முறையை உருவாக்கிய இவர், அர்ப்பணிக்கப்பட்ட ஹாட்லைன் உடன், மருத்துவமனை, மொபைல் யூனிட் இணைக்கப்பட்டு அதிவிரைவான சேவையால் பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளின் உயிர்களை காக்க முடியும் என நம்புகிறேன்.

இந்த திட்டத்தை துவங்க தமிழ்நாடு சரியான மாநிலம். தமிழ்நாட்டில் படித்தோரின் சதவிகிதம் அதிகமாக உள்ளதோடு, சாலைகளும தரமானவைகளாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, 100 முதல் 150 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களை உரிய நேரத்தில் இந்த வாகனம் எளிதில் சென்றடையும்.

இத்தகைய வாகனத்தை அமைக்கவும், சிடி ஸ்கேன் பயணிப்பதற்கும் இந்திய அணுசக்தி துறையின் ஒத்துழைப்பும் தேவைப்பட்டது. அதோடு உயிர்காக்க உதவும் இந்த வாகனம் செல்ல காவல்துறை, சாலை போக்குவரத்துத் துறை போன்றவைகளும், வாகன பாதுகாப்பாக பயணிக்க ஒத்துழைப்பும் அளித்துள்ளன.

அதிநவீனத்துவம் பெற்ற நாடுகளிலும் சவால் மிக்க இந்த சிகிச்சை முறை மிக குறைவாகவே உள்ளன. இத்தகைய முன்னணி, சவால்மிக்க மருத்துவ சிகிச்சை முறையைக் கொண்ட நகரமாக, வரலாற்றில் கோவை நகரம் இடம் பெறும். நாடு முழுவதுக்கும் ஒரு முன்னோடி அதிநவீன சிகிச்சை அளிக்கும் நகரமாக இது திகழும் என்பதில் ஐயமில்லை" கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...