திருமணமாகி ஒரு மாதத்திற்குள் மனைவி கொலை - கணவர் உட்பட மூவர் கைது!

கோவை மத்துவராயபுரம் பகுதியில் திருமணமாகி ஒரு மாதத்திற்குள், குடும்பத் தகராறில் மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் சஞ்சய் (20), உடந்தையாக இருந்த அவரது தாய் பக்ருநிஷா மற்றும் தந்தை லட்சுமணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவை அருகே மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் உடந்தையாக இருந்த அவரது தாய், தந்தை ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (20). இவர் தனது கல்லூரியில் உடன் படித்த செல்வபுரம் பகுதியை சேர்ந்த ரமணி (20) என்ற பெண்ணை காதலித்து கடந்த 6 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். 



பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து, சஞ்சய் வீட்டில், சஞ்சயின் தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சஞ்சய் கல்லூரியில் உடன் படிக்கும் மற்றொரு பெண்ணிடம் செல்போனில் பேசியது தொடர்பாக மனைவி ரமணி கேட்டுள்ளார். 

இந்நிலையில், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சஞ்சய் தனது மனைவி ரமணியின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கொலையை மறைப்பதற்காக தனது அம்மா, அப்பாவுக்கு போன் செய்ததையடுத்து, இருவரும் வீட்டுக்கு வந்து இறந்து போன ரமணியின் உடலில் அணிந்திருந்த உடையை அகற்றியுள்ளனர். 

பின்னர் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் பொடியை கரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்து துணிகளை மாற்றிவிட்டு சாணிப்பவுடர் குடித்தது போல மற்றவர்களை நம்பவைக்க, அக்கம்பக்கம் உள்ளவர்களை கூவி அழைத்து புளியைக் கரைத்து ஊற்றியும் உள்ளனர். 

பின்பு ஆலாந்துறை தனியார் மருத்துவமனைக்கு ரமணி உடலை தூக்கிசென்று மருத்துவரிடம் காண்பித்து, பின்பு பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அலுவலில் இருந்த பெண் மருத்துவர் ரமணி உடலை பரிசோதித்த பின்னர் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். 

இதனையடுத்து, மருத்துவமனையில் இருந்து காருண்யா நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ரமணி இறந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

சஞ்சய் தனது தந்தை, தாய் உதவியுடன் ரமணி தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடி உடல் அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், ரமணியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரமணி தந்தை அளித்த புகாரில் காருண்யா நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் ரமணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 29ஆம் தேதி சம்பவம் நடந்த போது முதலில் சந்தேக மரணம் பதிவு செய்யப்பட்டு, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்த நிலையில், விசாரணைக்கு பின் கொலை வழக்காக மாற்றப்பட்டது. 

தொடர்ந்து, கணவர் சஞ்சய், மாமியார் பக்ருநிஷா, மாமனார் லட்சுமணன் ஆகியோரை காருண்யா நகர் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

திருமணமாகி ஒரு மாதத்திற்குள் மனைவியை கணவனே கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...