மேட்டுப்பாளையம் அருகே வேளாண் துறை சார்பில் உழவர் தின விழா!

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த கண்டியூர் கிராமத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேளாண் துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உழவர் தின விழா மற்றும் விவசாயிகளுடான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வேளாண் துறை சார்பில் உழவர் தின விழா மற்றும் விவசாயிகளுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் அடுத்த கெம்மாரம்பாளையம் ஊராட்சி கண்டியூர் கிராமத்தில் தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் வேளாண்மை விரிவாக்க துணை இயக்கம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்பு திட்டம் இணைந்து உழவர் தின விழா மற்றும் விவசாயிகளுடான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் கலந்து கொண்டார். காரமடை வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி வரவேற்றார். கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.

கோவை வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் வெங்கடாசலம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் காடுகள் வணிக மன்றத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துபெருமாள், காரமடை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் காரமடை தோட்டக்கலை உதவி இயக்குனர் சுசீந்திரா, என்ஜீனியரிங் துறை உதவி பொறியாளர் ஹசீனா, கால்நடை உதவி மருத்துவர் வருண், உதவி வேளாண்மை அலுவலர் ராமகிருஷ்ணன், பட்டு வளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் சிவசங்கர், உதவி வேளாண்மை அலுவலர் சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...