கோவையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது!

கோவை அன்னூரை சேர்ந்த முகமது அலிபகத் என்பவர் தனது வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சொகுசு பைக்கை திருடிச்சென்ற அப்துல் ரகுமான் (21) என்பவரை கைது செய்த போலீசார் திருடப்பட்ட சொகுசு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொகுசு பைக்கை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், அன்னூரை சேர்ந்தவர் முகமது அலி பகத். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாது நபர் திருடி சென்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு அன்னூர் போலீசார் பதிவு செய்தனர். இந்நிலையில் அன்னூர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பசூர் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவரை காவல் நிலையம் அழைத்து விசாரித்த போது முகமது அலி பகத்-ன் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற இளைஞர் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர் அப்துல் மஜ்கார் மகன் அப்துல் ரகுமான் (21) என்பதும், இரு சக்கர வாகனத்தை திருடி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...