போலி ஆவணம் மூலம் சொத்து அபகரிப்பு - போலீசாரை ஏவிவிட்ட முதல் மனைவியின் உறவினர்கள்!

கோவை ஆவாரம்பாளையம் அடுத்த வரதராஜ் லே அவுட் பகுதியை சேர்ந்த சந்திரபாலன் (75) என்பவர் முதல் மனைவி மாணிக்கம் பேரில் வாங்கிய சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் முதல் மனைவியின் உறவினர்கள் அபகரித்துக் கொண்டு, போலீசாரை விட்டு அடித்து உதைத்து வெளியேற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரித்து கொண்டு வீட்டின் உரிமையாளரை போலீசாரை விட்டு வெளியேற்றிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் ரோடு வரதராஜ் லே அவுட் பகுதியை சேர்ந்த அய்யாவு என்பவரது மகன் சந்திரபாலன் (75). இவர் லேத் மெஷின் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி மாணிக்கம். சந்திரபாலன் - மாணிக்கம் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. 

இதன் காரணமாக மாணிக்கத்தின் சம்மதத்துடன் கல்பனா என்ற பெண்ணை சந்திரபாலன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சந்திரபாலன் தனது முதல் மனைவி மாணிக்கம் மற்றும் இரண்டாவது மனைவி கல்பனா மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். 

இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்பு சந்திரபாலன் தனது மனைவி மாணிக்கம் பெயரில் இடத்தை வாங்கி அதில் கீழ் பகுதியில் ஒர்க்‌ஷாப்பும், மாடியில் வீடும் கட்டி குடியேறினார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சந்திர பாலன் ஊரில் இல்லாத சமயத்தில் மாணிக்கத்தின் சகோதரர்கள் கோவைக்கு வந்து அவரை அழைத்துக்கொண்டு தங்களது சொந்த ஊரான உடுமலைப்பேட்டைக்கு சென்று விட்டனர். 

அதன் பிறகு மாணிக்கத்தின் பேரில் உள்ள சொத்தை அபகரிக்க மாணிக்கத்தின் சகோதரர்கள் திட்டமிட்டது சந்திரபாலனுக்கு தெரிய வந்தது. சொத்து பத்திரங்கள் அனைத்தும் சந்திரபாலனிடம் உள்ளது. உடனே இது குறித்து நீதிமன்றத்தில் சந்திரபாலன் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கு நிலுவையில் இருந்த சமயத்தில் மாணிக்கத்தின் சொத்து பத்திரங்கள் காணவில்லை என கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை சரவணம்பட்டி காவல்நிலையத்தில் தவறான தகவலை அளித்து அதன் பேரில் ஆவணம் கிடைக்கவில்லை என்ற சான்றிதழை பெற்று சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சொத்து ஆவணத்தை மாணிக்கம் மற்றும் அவரது சகோதரர்கள் மறுபடியும் பெற்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த சந்திரபாலன் 2020 ஆம் ஆண்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மாணிக்கம் மகாலட்சுமி என்ற நபருக்கு தனது சொத்தை கிரையம் செய்து கொடுத்ததாக போலியான விற்பனை ஆவணத்தை ஏற்படுத்தி உள்ளனர். 

இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு சந்திர பாலன் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தர். புகாரின் பேரில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் மதனகோபால் மற்றும் அதிகாரிகள் சிலர் சந்திர பாலனின் நிறுவனம் மற்றும் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளனர். 

இதை தொடர்ந்து அவர் சந்திர பாலன் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். ஆனால் அவரது புகாரை காட்டூர் போலீசார் பெற மறுத்ததாக கூறப்படுகிறது.



இந்நிலையில் நேற்று மாலை மகாலட்சுமி அவரது கணவர் மதனகோபால் மற்றும் காட்டூர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் உட்பட போலீசார் சந்திரபாலனின் வீட்டிற்கு சென்றனர். 

அங்கிருந்த சந்திரபாலன் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள்களை அடித்து உதைத்து வெளியேற்றினர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து சந்திரபாலன் மற்றும் அவரது குடும்பத்தார் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்த புகார் மனு அளித்தனர். 

புகாரில் அத்துமீறி அராஜகத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பழனியம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...