கோவையில் இன்று முதல் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் - சுகாதாரத்துறை அறிவிப்பு!

கோவையில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தீவிர வயிற்றுப்போக்கு பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் 5 வயது குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 10 சதவீதம் வயிற்று போக்கினால் ஏற்படுகிறது. நிமோனியாவுக்கு அடுத்தபடியாக இது ஒரு பொது சுகாதார பிரச்சினை ஆகும். நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகிறார்கள். 

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இரு வார கால தீவிர வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலும் தவிர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இத்திட்டமானது கோவை மாவட்டத்தில் இன்று முதல் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.

பொது சுகாதார துறை. பள்ளி கல்விதுறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளை சார்ந்த களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள். 

இம்முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார செவிலியர்கள், சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை பயிற்றுவிப்பார்கள். ஐந்து வயதுக் குட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு ஒரு ஓஆர்எஸ் பொட்டலம் (குழந்தைக்கு ஒன்று வீதம்) விநியோகிப்பார்கள். 

மேலும், வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளை கண்டுபிடித்து ஓஆர் எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரை அளித்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிந்துரை செய்வார்கள். இத்திட்டத்தின் மூலம் ஐந்து வயதுக்குட்பட்ட 3.17 லட்சம் குழந்தைகள் பயனடைய உள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...