அமைச்சர் செந்தில்‌ பாலாஜிக்கு ஜூன்‌ 28 வரை நீதிமன்றக்‌ காவல்‌!

மின்சாரத்துறை அமைச்சர்‌ செந்தில்‌ பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்த நிலையில், அவருக்கு ஜூன்‌ 28-ம்‌ தேதி வரை நீதிமன்ற காவல்‌ வழங்கி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.



சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பண மோசடி தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். 

இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை அமலாகத்துறையினர் ஆன்லைன் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்து இருந்தனர்.

அதன்பின்னர் மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதிக்க மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்துள்ளனர். 

மருத்துவ குழு அறிக்கை இஎஸ்ஐ முதல்வருக்கு அளிக்கப்படும். இஎஸ்ஐ மருத்துவமனையின் முதல்வர் அறிக்கையினை அமலாக்கத்துறையினரிடம் அளிப்பார். அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொள்ளும். 

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வந்தார். 

செந்தில் பாலாஜியின் சிகிச்சை தொடர்பான விவரங்கள் மற்றும் வழக்கு தொடர்பான விவரங்களை நீதிபதி கேட்டறிந்தார். அப்போது செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதியிடம் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

இதையடுத்து செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதேசமயம், அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெறவும் அனுமதி அளித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...