மட்டரகமான அரசியலை பாஜக செய்து வருகிறது - விவசாய தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்.குமார் கண்டனம்!

கோவையில் நடைபெற்ற விவசாய தொழிலாளர்கள் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாஜக அரசு, திமுக அரசை முடக்கும் விதமாக அமலாக்கத்துறையை ஏவிவிட்டு, மட்டரகமான அரசியலை செய்து வருவதாக விவசாய தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்.குமார் கண்டனம் தெரிவித்தார்.



கோவை: மத்திய பாஜக அரசு மட்ட ரகமான அரசியலை செய்து வருவதாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் கோவை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம், கோவை மத்திய மற்றும் வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் மாநில இளைஞரணி பொருளாளர் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் குருஸ் முத்து பிரின்ஸ் தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, மாவட்டத்திற்கு விவசாய தொழிலாளர் கட்சியின் பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். 

இதில் புதிய பொறுப்பாளர்களான, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பொறியாளர் ராஜா, கோவை மத்திய மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார், கோவை மத்திய மாவட்ட அமைப்பாளர் ஆனந்தராஜ், தமிழக கட்டட தொழிலாளர் மத்திய சங்கம் கோவை மத்திய மாவட்டம் அமைப்பாளர் ஜெயபால் ஆகியோரை பதவி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இரண்டு தொகுதிகள் கொண்டது ஒரு மாவட்டமாக பிரிக்கப்பட்டு அந்த மாவட்டங்களுக்கு விவசாய தொழிலாளர் கட்சியின் நிர்வாக ஏற்படுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளுவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது. 

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, இவை அனைத்திலும் முதன்மை பெற்ற இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. சிறந்த ஆட்சி வழங்கி வரக்கூடிய மு.க.ஸ்டாலின் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் மத்திய மோடி அரசு தலைமைச் செயலகத்தில் ஒரு அமைச்சர் அறையில் வருமான வரித்துறை மூலம் அமலாக்க துறைகளை பயன்படுத்தி சோதனையை நடத்துவது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய இழுக்கு ஆகும்.

இந்த செயலை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. பாரதிய ஜனதா ஆட்சி இல்லாத மாநிலங்களில் இப்படி சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி அந்த அரசை பணிய வைப்பது, ஆட்களை விலை கொடுத்து வாங்குவது, போன்ற மட்டரகமான அரசியலை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதை உடனடியாக மத்திய மோடி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்த கூட்டம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜகா. முருகன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி பொதுச் செயலாளர் பொறியாளர் ஜெகதீசன், தமிழக கட்டட தொழிலாளர் மத்திய சங்கம் பொதுச்செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...