வடிகால் பணிக்கு ரூ.14.80 லட்சம் நிதி ஒதுக்கிய எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமாருக்கு மக்கள் நன்றி

கொண்டையம்பாளையம் அருகேயுள்ள திருமலைசெட்டிபுதூர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.80 லட்சம் மதிப்பில் நிறைவேற்றிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமாருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் கொண்டையம்பாளையம் அருகே மழைநீர் வடிகால் பணிகளை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார். 

கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி கோட்டைப்பாளையம் கிராமம் 6 வது வார்டு பகுதி திருமலைசெட்டி புதூரில் மழை நீர் வடிகால் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வடிகால் பிரச்சனைக்கு தீர்வாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர், பி.ஆர்.ஜி அருண்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் வடிகால் பணிகளை மேற்கொள்ள ரூ.14.80 லட்சம் ரூபாய் ஒதுக்கி தந்துள்ளார். 

இந்நிலையில், வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை பணிகள் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வானது, சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர், 6 வது வார்டு கவுன்சிலர் S.தீபன்குமார் முன்னிலையில் பூமி பூஜை போடபட்டது.

இதில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய குழு தலைவர் கவிதா சண்முகசுந்தரம், ஒன்றிய குழு துணைத்தலைவர் ருக்குமணி பாலகிருஷ்ணன், மற்றும் மற்ற வார்டு கவுன்சிலர்கள் கண்ணம்மாள், ப்ரித்தா மற்றும் ஊராட்சி செயலர் மாருகுட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், நிதியினை ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், நீண்ட நாள் கோரிக்கையினை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து அதனை நிறைவேற்றி தந்த 6 வது வார்டு கவுன்சிலர் S. தீபன்குமார் ஆகியோரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...