சமூக வலைதளத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. குறித்து அவதூறு பரப்பிய இளைஞர் கைது

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை கரும்புக்கடை அடுத்த அன்பு நகரை சேர்ந்தவர் ஜூபேர் அகமது (24). இவர் கரும்புக்கடை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் தொழில்நுட்ப பிரிவு கோவை மாவட்ட செயலாளராக உள்ளேன். 

எங்களது தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்காழியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அவர் புகைப்படம் எடுத்து உள்ளார். 

அந்த புகைப்படத்தை கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவர் தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு போலீசார் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படத்தை பதிவிட்ட திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...