20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டதற்காக, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவருக்கு 2025–26ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் சிறப்புப் பணிக்கான விருது வழங்கப்பட்டது.


Coimbatore: தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், சென்னையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 2025-26ஆம் ஆண்டிற்கான சிறப்புப் பணிக்கான விருதுகளை வழங்கினார்.



அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப. விருது மற்றும் நற்சான்றிதழைப் பெற்றார்.

இதே விருது, முன்னாள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். சரவணன், இ.ஆ.ப. மற்றும் முன்னாள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி, இ.ஆ.ப. ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...