கோவையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்ட பாதையை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியம்!

கோவையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற பொதுமக்கள் தினமும் 8 கிலோமீட்டர் நடப்பதற்கு மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கான பாதையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.



கோவை: கோவையில் நடப்போம் நலம்பெறுவோம் திட்ட பாதைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். 



கோவையில் பொதுமக்கள் 8 கிலோமீட்டர் நடை பயிற்சி செய்யவுள்ள ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்ட நிகழ்விற்கான இடங்களில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆய்வு மேற்கொண்டார். 



பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 



தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதல்வர் வேகமாக செயல்பட்டு வருகிறார். 38 வருவாய் மாவட்டத்தில் எட்டு கிலோமீட்டர் நடைபாதையை அமைத்து மர இருக்கை அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ள முடிவெடுத்து உள்ளோம்.

ஜப்பான் டோக்கியோ சென்ற போது 8 கிலோமீட்டர் ஹெல்த் வாக் அமைக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் தினம் தோறும் பத்தாயிரம் நடைபாதைகள் நடந்தால் உடல் சீராக இருக்கும். மக்களை நடப்பதற்கு பயிற்க நடைபாதை அமைக்கப்படுகிறது. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் 8 கிலோமீட்டர் பாதையை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. கடந்த வாரம் மதுரையில் எட்டு கிலோ மீட்டர் நடைபாதை இறுதி செய்யப்பட்டது. மக்கள் நல்வாழ்வு துறையை சேர்ந்த மாவட்ட அலுவலர்கள் மாநகராட்சி ஆணையாளர் பாதையை தேர்வு செய்து பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

முதல்வர் 38 மாவட்டங்களில் பணிகள் துவங்கி வைக்கிறார். செந்தில் பாலாஜிக்கு நேற்று முன்தினம் ரெகுலர் ரூம் என்ற அடிப்படையில் ரூமுக்கு வந்துள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். கோவையில் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது.

தமிழகத்திலேயே சிறந்த நடைபாதை இடம் கோவை பந்தய சாலையில் சிறப்பாக உள்ளது. வாலாங்குளம் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நடைபாதை அமைப்பது போன்ற பணி மாநகராட்சி செய்து வருகிறது. 



கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். 



அங்கு செல்ல உள்ளோம். இன்று, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மூன்று திட்டங்கள் செயல்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...