கடிதம் எழுதிய கோவை சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கோவையை சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் ஜெய் பிரணவ் என்ற சிறுவன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில், பல்வேறு பணிகளுக்காக கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுவனை பாராட்டியதுடன், அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தார்.



கோவை: தனக்கு கடிதம் எழுதிய கோவையை சேர்ந்த சிறுவனை பாராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தார். 



கோவை மாவட்டம் காளப்பட்டி அடுத்த நேரு நகர் பகுதியை சேர்ந்த ஜெய் பிரணவ் என்ற 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும் அந்த கடிதத்தில் தனக்கு பதில் அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். 



இந்நிலையில், பல்வேறு பணிகளுக்காக இன்று கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுவன் ஜெய் பிரணவுடன் சிற்றுண்டி அருந்தினார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

கடந்த 20 நாட்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன் பிரணவ் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார். அக்கடிதத்தை படித்துவிட்டு பதில் சொல்ல சொல்லியும் இருந்தார். பதில் கடிதம் எழுதுவதை காட்டிலும் நேரடியாக சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கும் இருந்தது, அந்த வகையில் துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்காக இன்று கோவையிலிருந்த நான் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் அந்த பதிவில் சிறுவன் எழுதிய கடிதம் மற்றும் சிறுவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...