கோவையில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் கைது!

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதமான முறையில் விசாரணை நடத்துவதை நிறுத்த வலியுறுத்தி கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



கோவை: கோவையில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். 

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதமான முறையில் விசாரணை நடத்துவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். இப்பேரவையின் அமைப்பு செயலாளர் நாகராஜன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. 



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தின் துவக்கமாக அமலாக்க துறையை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

மேலும் இப்போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடமும் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 



பின்னர் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 



இந்த போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாகராஜன், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை சட்டவிரோதமானது. அதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய வேண்டும். 

மாதம்தோறும் நண்பர்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி செலவு செய்வதாக ஒப்புக்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அமலாக்கத்துறை வருமானவரித்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுகிறது. 

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்த பிறகு, அண்ணாமலை தூண்டுதலின் பெயரால், அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியை சீர் குலைக்கின்ற வகையில், ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்கட்சிகளை பழிவாங்குகிற நோக்கில், திமுக அரசிற்கு எதிராக இந்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. 

மோடி சர்க்கார் ஜனநாயக விரோத போக்கை நிறுத்தி கொள்ள வேண்டும். அது தவறும் பட்சத்தில் ஒற்றை கருத்துகள் உடைய அமைப்புகளை திரட்டி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...