செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து நீக்கியது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி - வானதி சீனிவாசன் கருத்து!

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கியது, வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என கூறிய வானதி சீனிவாசன், எதிர்க்கட்சியில் இருந்த போது குற்றச்சாட்டுகளை கூறி, வழக்கை கொண்டு வந்த ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள வெற்றி என்று தான் கூறவேண்டும் என்றார்.


கோவை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.



கோவை சித்தாபுதூர் பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை நடைபெற்ற மத்திய பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க பொதுகூட்டத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கியது தொடர்பாக இரண்டு விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. குற்ற விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது நியாயமான விசாரணைக்கு உகந்ததாக இருக்காது.

இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் எதை பாதுகாக்க வேண்டும் என ஆளுநராக நியமிக்கப்பட்டாரோ அந்த அரசியலமைப்பு இயந்திரம் சீர்குலையும் நிலைமை உருவாகி கொண்டிருக்ககூடிய காரணத்தால் செந்தில் பாலாஜியை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கிறேன் என ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அரசியலமைப்பை படிக்கும் போது நமக்கு தோன்றுவது அமைச்சர்கள் குழுவை நியமிப்பது, மாற்றுவது, விடுவிப்பது என்பது எல்லாம் முதலமைச்சரின் அதிகாரம் போலவே ஒரு பிம்பம் இருந்தது.

நியாயமான விசாரணை நடக்க வேண்டும், நியாயமான விசாரணை என்பதை மாநிலத்தின் அரசியலமைப்போடு தொடர்பு ஏற்படுத்தி பார்க்க வேண்டும் என்றால் ஆளுநர் எடுக்கக் கூடிய முடிவு எதனால் என்பது புரியும்.

மற்றொன்று உயர்நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு வந்திருக்கிறது. மாநிலத்தின் முதல்வர், ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என கூறினால் நீதிமன்றத்தில் அதற்கான பதிலை அவர்கள் சொல்லலாம். நிச்சயமாக விவாதிக்கலாம்.

ஆனால் அமைச்சர்களுக்கு தரப்பட்டுள்ள ஒரு சட்டபூர்வமான பாதுகாப்பை பயன்படுத்தி குற்றவாளியாக இருக்கக் கூடிய ஒரு நபர் தொடர்ச்சியாக அமைச்சராக இருப்பது என்பது நியாயமான விசாரணை பாதிக்கும் என்பதை எந்த சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்வார்கள்.

அதன் அடிப்படையில்தான் ஆளுநர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இது யாருக்கு கிடைத்த வெற்றி என்பதை விட, இந்த மாதிரி ஒரு முடிவினை எடுக்கக்கூடிய நிலைமைக்கு தள்ளியதற்கு திமுக அரசு தான் வெட்கப்பட வேண்டும்.

இதில் பாஜகவோ அல்லது அதிமுகவோ தங்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறினாலும், இதில் வெற்றி அடைந்திருப்பது முதல்வர் ஸ்டாலின் தான் முதலில் போராட்டத்தை ஆரம்பித்தார், செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்தார், குற்ற வழக்கை கொண்டு வந்தார். நாங்கள் கூறாததை ஸ்டாலின் தான் கூறினார்.

இது பாஜக, அதிமுக வெற்றி பெற்றது என்பதைவிட ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்று தான் அவர்கள் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...