சிதம்பரம் தீக்சிதர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் நானே போராட தயங்க மாட்டேன் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை!

தீக்சிதர்கள் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோவில் உள்ள நிலையில், மாநில அரசு கோவிலை கட்டுப்படுத்த நினைக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி அரசாங்கம் செயல்படுகிறது என கூறிய அண்ணாமலை, சிதம்பரம் தீக்சிதர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் நானே போராட தயங்க மாட்டேன் என்றார்.



கோவை: சிதம்பரம் தீக்சிதர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் நானே போராட தயங்க மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



அமைச்சரை நீக்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறதா என்பதில் பாஜக உள்ளே செல்ல விரும்பவில்லை. ஆனால் மு.க ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஆளுநர்களிடம் கடந்த காலங்களில் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரத்தில் முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி நீக்கம் செய்வதாக ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்பது முதல்வருக்கு தெரியும், முதல்வர் வரம்பு மீறி செயல்படுகிறார்.

ஆளுநர் சார்பாக நாங்கள் பேச முடியாது. ராஜ்பவன் வேறு பாஜக வேறு. தமிழ்நாடு அமைச்சரவையில் 99 சதவீத அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பலருக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆளுநர் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றத்தின் மீது தான் வெறுப்பு. இது தனிமனித தாக்குதல் கிடையாது. முதல்வர் நடந்து கொள்வது தர்மத்திற்கு விரோதமானது. ஒரு மனிதனுக்காக அரசங்கத்தை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.

கல் குவாரிகள் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் கட்சி வாரியாக குவாரிகள் இயங்கி வருகிறது. ஆனால், ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி மற்ற கட்சிகளை பழி வாங்குகிறது. செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாகி உள்ளார்.

சிதம்பரம் கோவில் பற்றி பொதுப்பார்வை இல்லாமல் இருக்கிறது. தீக்சிதர்கள் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோவில் உள்ள நிலையில், மாநில அரசு கோவிலை கட்டுப்படுத்த நினைக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி அரசாங்கம் செயல்படுகிறது. மாநில அரசு அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள். மீறி கொடுத்தால் கோவில் முன்பு நானே பேராட தயங்கமாட்டேன்.



வருகின்ற ஜீலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து நடைபயணம் தொடங்க உள்ளது. அமித்ஷா இதனை தொடங்கி வைக்க உள்ளார். கட்சி நிகழ்விற்காக ஆப்பிரிக்கா செல்ல இருப்பதாலும், உள்துறை அமைச்சரின் நேரம் கிடைக்க வேண்டி உள்ளதால் நடைபயணம் தாமதமாகிறது.

மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை. யார் மனதையும் புண்படுத்தமால் இருக்குமாறு எடுக்க வேண்டும். நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, நிஜத்தில் நான் நடிக்க தெரியாதவன். விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

விஜய் வந்தால் வரட்டும். மேலும் விஜய் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிக்கு கண்டனம் எழுந்தது குறித்த கேள்விக்கு படத்தில் புகை பிடிப்பதால் இளைஞர்கள், குழந்தைகள் அதை பின்பற்றி கெட்டு போவாங்க என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

சாலையில் கூட தான் புகைப்பிடிக்க செய்கிறார்கள். அதை பார்த்து கெட்டு போகமாட்டார்களா?, ஆனால் மத்திய அரசின் விதி முறைகளை பின்பற்றி மறைக்க வேண்டியதை மறைத்து, வாசகங்களை போட்டு படத்தை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...