கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிய கும்பல் கைது

கோவையில் சமீப காலமாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனங்கள் திருடு போனது. கண்காணிப்பு காமிராக்களில் பதிவான கட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருந்த போதும் இரு சக்கர வாகன கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி காட்டி வந்தனர்.

இந்த நிலையில், ரேஸ் கோர்ஸ் சாலை , பிக்பஜார் சந்திப்பு ஆகிய இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பேசிய 5 வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது,  சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சில்வானா சாந்தகுமர், காலக்குமார் சூலூரை சேர்ந்த கோபால கிருஷணன், பட்டணம் பகுதியை சேர்ந்த அசோக்,  நீலிக்கோணாம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் ஆகிய வாலிபர்கள் கும்பலாக இருசக்கன வாகனங்களை திருடியது தெரியவந்தது. 

தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 34 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், ஐந்து வாலிபர்களையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...