ஆலாந்துறையில் பள்ளியின் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது - வீடியோ வைரல்!

ஆலாந்துறை அடுத்த கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி அருகே இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசமரம், வலுவிழந்து காணப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் வீசிய காற்றில் வேரோடு சாய்ந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறையில் பள்ளி அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிக்கு அருகிலேயே நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த அரச மரம் ஒன்று இருந்து வந்தது.



இந்த அரச மரம் வலுவிழந்து காணப்பட்ட நிலையில் இன்று மதியம் சுமார் 2 மணிக்கு மேல் அப்பகுதியில் வீசிய காற்றின் காரணமாக அரசமரம் வேரோடு சாய்ந்தது.



மரம் சாய்ந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து விலகி ஓடினர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ கட்சிகள் வைரலாகி வருகிறது.

அதே சமயம் மரம் சாய்ந்தது மதியம் என்பதால் பள்ளி குழந்தைகள் யாரும் வெளியில் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...