கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழு உண்ணாவிரதம்!

வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும், ஜாக் தலைவர் மீதான நடவடிக்கையை திரும்ப பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ஜாக் தலைவர் மீது பார் கவுன்சில் எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும். வழக்கறிஞர் சேம நல நிதியை 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



கோவையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...