கோவையில் ஆட்சியர் தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட எஸ்.பி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், சாலை பாதுகாப்புப் பணியினை மேம்படுத்துவது சம்பந்தமாகவும், விபத்துகளை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வு, மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவையில் உள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு போக்குவரத்துக் கழகம், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக பொது பயன்பாட்டு வாகன ஓட்டுநர்களுக்கு சாலை விதிமுறைகள் சார்ந்த புத்தாக்க பயிற்சி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களை உயிர் அமைப்புடன், மாவட்ட நிர்வாகம் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய துறைகள் இணைந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...