ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் முதுகலை சமூகப் பணி துறையும் ரெஸ்ட் என்னும் தன்னார்வ அமைப்பும் இணைந்து பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வழங்கியது. இதில் பங்குபெற்ற பெண்களில் பெரும்பாலானோர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். இப்பயிற்சியானது சர்வதேச பெண்கள் தினத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.



இதில், ரெஸ்ட் அமைப்பின் இயக்குநர் டி.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இப்பயிற்சியை இக்கல்லூரயின் சமூகப் பணித் துறை மாணவி வைசாலி நடத்தினார்.

இதில், சுய உதவிக் குழுவினைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வளையல் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் போது டி.சீனிவாசன் பேசுகையில், சுய தொழிலும், சுய வேலைவாய்ப்பும் பெண்களை தாங்கள் சொந்த காலில் நிக்க உதவுகிறது. தற்பொழுதுள்ள சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைத்து மக்களின் பங்களிப்பும் தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சுய வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். சமகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஏதோவொரு வேலை செய்ய வேண்டும். அல்லது சுயமாக வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வீடும் நாடும் வளர்ச்சியடையும். பெண்கள் ஸ்டார்ட்டப் நிறுவனங்களை துவக்குவது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கு அவர்கள் தொழில் முனைவோர்க்கான பயிற்சியை பெற்றிருக்க வேண்டும். சமூக நல அமைப்புகள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், பெண் தொழில் முனைவோர்களை உறுவாக்குவதிலும் பெரும் பங்காற்ற வேண்டும்" என்று கூறினார்.



இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு வளையல் மற்றும் இதர ஆபரணங்கள்  தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலான சுயஉதவுக் குழு பெண்களும் மற்றும் இல்லத்தரசிகளும் கோவையில் பல்வேறு பகுதியில் இருந்து கலந்துகொண்டர்.



இதில், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சமூகப் பணித் துறையின் தலைவர் அழகர்சாமி, பேராசிரியர் மோகனப்பிரியா மற்றும ரெஸ்ட் அமைப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...