உடுமலை அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் உயிரிழந்த சோகம்!

நேற்றைய தினம் காலை 7.40 மணிக்கு சென்னை ரயிலில் உறங்கிக் கொண்டு வந்த நபர், உடுமலை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட நிலையில், திடீரென குதித்ததால், தவறி விழுந்து, ரயிலுக்கு அடியில் சிக்கி உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபர் உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 7.40 மணிக்கு சென்னை ரயில், உடுமலை ரயில் நிலையத்திற்கு வந்து நின்று புறப்பட்டு சென்றது. அப்போது, ரயில் புறப்பட்ட நிலையில் ரயிலில் இருந்த நபர் ஒருவர், திடீரென வெளியே குதித்துள்ளார். இதனிடையே, அவர் நிலை தடுமாறில் ரயில் சக்கரத்தில் சிக்கிய நிலையில், உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயிலின் கடைசி பெட்டியில் பயணித்த அந்த நபர் உடுமலையை சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தூங்கிக் கொண்டு வந்தவர் திடீரென உடுமலை ரயில் நிலையத்தை பார்த்தவுடன் தூக்க கலக்கத்தில் வெளியே குதித்துள்ளார்.

அப்போது ரயில் சிறிது வேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகிய நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்து, பழனியில் இருந்து வந்த ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...