வெள்ளகிணர் அருகே ரூ.186.34 லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பிக்கும் பணி - அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்!

துடியலூர் அடுத்த வெள்ளகிணர் பகுதியில் ரூ.186.34 லட்சத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, அப்பகுதியில் வரும் 2 நகர பேருந்துகளை 4ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் பெண்கள் கோரிக்கை வைத்தனர்.



கோவை: துடியலூர் அடுத்த வெள்ளகிணர் பகுதியில் ரூ.186.34 லட்சத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

கோவை துடியலூர் அருகேயுள்ள வெள்ளகிணர் பகுதி 2-ல் மாநகராட்சியில் 1, 2, 26, 27 மற்றும் 28 ஆகிய வார்டுகளில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 186.34 லட்சத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பகுதி செயலாளர் அருள்குமார் தலைமையில் நடந்த பூமிபூஜை நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள், அவுசிங் யூனிட் பகுதி 2க்கு ஏற்கனவே வந்து கொண்டிருந்த நான்கு டவுன் பஸ்சில் தற்போது இரண்டு தான் வருவதாகவும், அதுவும் முக்கிய நேரங்களில் வருவதில்லை என்றும் பள்ளி மாணவர்கள் வசதிக்காக டவுன்பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் கல்பனா ஆனந்தகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், ஆணையாளர் பிரதாப், மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், பகுதி கழக செயலாளர் சிவா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக் ஆறுகுட்டி, மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பமணி அருள்குமார், கற்பகம் ராஜசேகர், சித்ரா தங்கவேலு, சாந்தாமணி பச்சைமுத்து, அம்பிகா தனபால், சித்ரா வெள்ளியங்கிரி, கண்ணகி ஜோதிபாசு, நிர்வாகிகள் முன்னால் அவைத் தலைவர் வெ.நா.பழனியப்பன், பகுதி கழக நிர்வாகிகள் சண்முகசுந்தரம், இராக்கிமுத்து, அருண், சம்பத், தன்ராஜ் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் சுப்ரமணியன், ரம்யா, வட்டக் கழக செயலாளர்கள் இராஜசேகரன், சண்முகம், சோமசுந்தரம், சுந்தரம். மற்றும் வட்டக் கழக பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...