டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட 2 யூடியூபர்களிடம் போலீசார் விசாரணை!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட ‘பேசு தமிழா பேசு’ யூடியூப் சேனலை சேர்ந்த ராஜவேல் நாகராஜ் மற்றும் இந்திய மக்கள் மன்றம் என்ற இயக்கத்தை நடத்தி வரும் வராகி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட 2 யூடியூபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த 7ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.



இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கூடுதல் டிஜிபி அருண் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் அவருக்கு தூக்கமின்மை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள் பதிவு செய்த எட்டு பேருக்கு மாநகர போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளித்திருந்தனர்.

இதில் யூடியூப் சேனலில் டிஐஜி விஜயகுமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலை சேர்ந்த ராஜவேல் நாகராஜ் மற்றும் இந்திய மக்கள் மன்றம் என்ற இயக்கத்தை நடத்தி வரும் வராகி ஆகிய இரண்டு பேரையும் விசாரணைக்கு ஆஜராக கூறிய நிலையில், இன்று ராமநாதபுரம் காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராகினர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...