கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாமன்னன் படத்தின் டிக்கெட்டை அனுப்பிய பாமக நிர்வாகி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மனுக்களை பெறும் போது பொதுமக்களை சமமாக நடத்த கோரி, பாமக நிர்வாகி ஒருவர் மாவட்ட ஆட்சியருக்கு சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தின் டிக்கெட்டை ஆன்லைனில் அனுப்பியுள்ளார்.


கோவை: கோவையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது மக்களை சமமாக நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு மாமன்னன் படத்தின் டிக்கெட்டை ஆன்லைனில் அனுப்பியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் அவர்களது மனுக்களை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவர்.

இந்நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை People Of Coimbatore என்ற அமைப்பினர் கனிமவள கொள்ளை குறித்து மனு அளித்தனர். அப்போது அந்த அமைப்பில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மனுவை அமர்ந்து கொண்டே வாங்கியதாகவும் மனு அளிக்க வந்த பொதுமக்கள் நின்று கொண்டே மனு அளிப்பதாகவும், இது மாவட்ட ஆட்சியர் மேலானவர் போலவும் மக்கள் தாழ்வானவர் போலவும் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் வெளியான மாமன்னன் திரைப்படத்தின் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து அனுப்பியதாக அசோக் ஸ்ரீநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



இது குறித்தான அவரது ட்விட்டர் பதிவில், "நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கு டிக்கெட் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். படத்தின் மையக்கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். குறைதீர்க்கும் முகாம் அன்று எங்கள் புகாரை பதிவு செய்ய மணி கணக்கில் நின்று ரசீது பெற வேண்டும்.



பின்பு ரசீதை வைத்துக்கொண்டு முகாமின் அறை வராண்டாவில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும் பின்பு உங்களை சந்திக்கும் போது நீங்கள் மேடையில் உட்கார்ந்து இருப்பீர்கள் நாங்கள் உங்கள் முன் நின்று பேச வேண்டும்.

உங்களை நாங்கள் அன்னார்ந்து பார்க்க வேண்டும். நீங்கள் எங்களுக்கு கீழே பார்ப்பது போல மேசை அமைக்கப்பட்டு இருக்கும். உங்கள் செயல் நீங்கள் எங்களை விட மேலானவர் போலவும் உங்களை விட நாங்கள் (மக்கள்) தாழ்வானார் போலவும் இருக்கும்.

நாங்கள் ஏன் உங்கள் முன்பு நிற்க வேண்டும் நீங்கள் வெறும் அரசு ஊழியர் தான். மக்கள் பிரச்சனையை தீர்ப்பது உங்கள் கடமை. மேடையில் இடமிருந்தும் மக்களை ஏன் நிற்க வைக்க வேண்டும் உங்களின் முன்பு நாங்கள் உட்கார கூடாதா? உடனடியாக இதை சரி செய்ய வேண்டும்.

இல்லை என்றால் அடுத்த முறை நான் நாற்காலியுடன் தான் வருவேன் என பதிவிட்டு தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் மக்களை தவறாக நடத்த வேண்டாம் என தமிழக முதல்வரையும் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...