தாராபுரம் அருகே அரிசி ஆலையில் இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது!

தாராபுரம் - பழனி சாலையில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தில்லைமுத்து (23) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 30 கிலோ இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம் - பழனி சாலையில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் சமீபத்தில் திருட்டு போனது. இது குறித்து அரிசி ஆலையின் மேலாளர் செந்தில்நாதன் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தாராபுரம் உதவி காவல் ஆய்வாளர் கருப்புசாமி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தில்லைமுத்து (23) மற்றும் இவரது கூட்டாளிகளான தீனா (23), கவுதம் (23) ஆகிய 3 பேர் இரும்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது.



இதில் தில்லைமுத்து மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இவரிடமிருந்து 30 கிலோ இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவரது கூட்டாளிகளான கவுதம் மற்றும் தீனா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...