தாராபுரத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு - அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான 13 ஏக்கர் 12 சென்ட் நிலங்கள் நீதிமன்ற உத்தரவின் படி மீட்கப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் நீதிமன்ற உத்தரவின் படி மீட்கப்பட்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தாராபுரம் அருள்மிகு காடு அனுமந்தராயர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான 10.98 ஏக்கர் நன்செய் நிலம் தாமாக முன் வந்து ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், கோனாபுரம் அருள்மிகு லட்சுமி நாராயணசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 2.14 ஏக்கர் நன்செய் நிலம், தனி நபரிடம் இருந்தது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வருவாய் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.



இந்த வழக்கில் கோயிலுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமர துரை உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் ஜெய தேவி தலைமையில், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டது.



இதன்படி, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 ஏக்கர் 12 சென்ட் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் மகேஸ்வரன், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் குருராஜன், தாராபுரம் சரக ஆய்வாளர் ஆதிரை, செயல் அலுவலர் மல்லிகா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் இணைந்து தாராபுரம் நகரில் 13 ஏக்கர் 12 சென்ட் நிலம் திருக்கோவிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...