மான் கி பாத் நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த ஓவியரை பாராட்டிய பிரதமர் மோடி!

நேற்று ஒளிபரப்பான மான் கி பாத் நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் சார்ந்து பேசிய பிரதமர் மோடி, அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த ஓவிய ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு 300க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ள கோவையை சேர்ந்த ஓவியர் சுரேஷின் முயற்சியை பாராட்டியுள்ளார்.



கோவை: மனதின் குரல் நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த ஓவியர் சுரேஷின், வரும் உயிரினங்கள் குறித்த ஓவிய ஆவண முயற்சியை பிரதமர் பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன் கி பாத் - மனதின் குரல்' எனும் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்ட 103வது மனதின் குரல் நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் சார்ந்து பிரதமர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஓவியர் ராகவன் சுரேஷ் செய்து வரும் 'அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த ஓவிய ஆவண' முயற்சி குறித்து குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த தன்னுடைய ஓவிய முயற்சி குறித்து பிரதமர், மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருப்பது, தனக்கும் தனது முயற்சிக்குமான மிகப் பெரிய அங்கீகாரம் என தெரிவிக்கிறார் ஓவியர் ராகவன் சுரேஷ்.



59 வயதாகும் இவர், பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஓவியராக பணிபுரிந்து வருகிறார். ஓய்வு நேரத்தில் அழியும் தருவாயில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை தத்துரூபமான ஓவியமாக வரைந்து வருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 350 க்கும் மேற்பட்ட ஓவியங்களை இவர் வரைந்துள்ளார். குறிப்பாக, இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை மிகத் துல்லியமாக உரிய தகவல்களோடு ஓவியமாக வரைந்து ஆவணப்படுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், தாவரங்கள், பறவைகள், விலங்குகள் உட்பட அனைத்து இயற்கை வளங்களையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த ஓவியங்களை வரைந்துள்ளார்.

மேலும், அடுத்த தலைமுறையினருக்கு அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஓவியங்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் காட்சிப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...