தமிழகத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை நபர் - அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என எழுந்த சர்ச்சை!

இலங்கையை சேர்ந்த பிரதாபன் தர்மலிங்கம் (47) என்ற நபர் தமிழகத்தில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அரசின் முக்கிய இடங்கள் வழியாக பயணிக்க உரிய அனுமதி பெறப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.



திருப்பூர்: மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் சென்னையில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வவுண்யா பகுதியை சேர்தவர் பிரதாபன் தர்மலிங்கம் (47). இலங்கை பிரஜையான இவர் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி 3 மாத விசாவில் இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்துள்ளார்.



இந்நிலையில் இந்த மாதம் ஜூலை 23ஆம் தேதி சென்னையில் இருந்து சைக்கிளில் பயணத்தை துவங்கிய பிரதாபன் திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், சேலம் வழியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்தடைந்தார்.

பின்னர் பல்லடம் அரசுக்கல்லூரியில் மரம் நட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதாபன்,



இலங்கையில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி பின்னர் பணியில் இருந்து விலகினேன், இன்னும் திருமணம் ஆகவில்லை. 38 நாட்களில் 38 மாவட்டங்களில் மரம் நடுவதன் அவசியம் குறித்து சுமார் 3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறேன்

தற்போது பல்லடத்தில் இருந்து சூலூர் வழியாக கோவை சென்று நீலகிரி மாவட்டத்தை அடைந்து பின்னர், அங்கிருந்து மதுரை, கன்னியாகுமரி சென்று பின்னர் சென்னை சென்று பயணத்தை முடிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையை சேர்ந்த பிரதாபன் மேற்கொண்டிருக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் முறையாக அனுமதியோ, தகவலோ தெரிவிக்காமல் மேற்கொண்டிருப்பது உளவுத்துறை கண்காணிக்க தவறியதோ? என்கிற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களை வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தினாலும் பயணத்திற்கான செலவுகள் அனைத்தும் நண்பர்கள் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறுகிறார்.

சூலூர் போன்ற விமான படை தளங்கள் அமைந்திருக்கும் பகுதியை கடந்து செல்வது மற்றும் வெடி மருந்து தொழில்சாலை அமைந்துள்ள அரவங்காடு, ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ள வெலிங்டன் பகுதியை கடந்து செல்ல போலீசாரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் இல்லையா?.

மேலும் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இலங்கையை சேர்ந்த பிரதாபனின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?. பயணத்தை மேற்கொள்ளும் பிரதாபன் அரசுத்துறை சார்ந்த அலுவலக வளாகங்களில் எவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தினார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு நாடு நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்வதில் உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பில் தான் உள்ளது. ஆனால் பிரதாபன் போன்ற வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் போது அனுமதி பெற்று நடத்தினால் தான் அதன் பயன் பொதுமக்களை சென்றடையும்.

இந்நிலையில் பிரதாபனின் சைக்கிள் பயணத்தை உளவுத்துறை கண்காணித்து பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றை உறுதி செய்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் ஜனாதிபதி நீலகிரி பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு அவசியம் எனவும் கருதப்படுகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...